திருத்தணி நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்

திருத்தணி:திருத்தணி நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து நகர அ.தி.மு.க., வினர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திருத்தணி நகராட்சி, 14வது வார்டில் உள்ள கீழ்பஜார் தெருவில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையாக மழைநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து பலத்த மழை பெய்தால் மழைநீர் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரம் இரவு பெய்த மழையால் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு பொக்லைன் இயந்திரத்துடன் வந்து கீழ் பஜார் தெருவில், 200 மீட்டர் துாரத்திற்கு மேல் மழைநீர் கால்வாயை உடைத்து தண்ணீரை வெளி யேற்றினர்.
ஆனால் அகற்றிய மண் மற்றும் கழிவுகளை அகற்றாமல் கீழ்பஜார் தெருவிலேயே இருந்ததால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மேலும், வீடுகள் முன் கால்வாய் உடைந்ததால், வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் ஒரு வாரமாக சிரமப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று திருத்தணி நகர அ.தி.மு.க., செயலர் சவுந்தர்ராஜன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழ்பஜார் தெருவில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும், புதிய கால்வாய் கட்ட வேண்டும், மேட்டுத் தெருவில் இருந்து வரும் மழைநீரை முறையாக வெளியேற்ற கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, நகராட்சியின் அலட்சியத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் மலர்வழி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சு நடத்தினர். தொடர்ந்து கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
இதையடுத்து மறியலை கைவிட்டு சென்றனர்.
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்