சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் ரூ.80 கோடி ஒதுக்கீடு

சென்னை:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு, 80 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டு உள்ளது.

டெல்டா மாவட்டங்களில், ஆண்டுதோறும் குறுவை சாகுபடி பருவத்திற்கு, விவசாயிகளுக்கு மானியம் வழங்க, அரசு 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வருகிறது.

நடப்பாண்டு டெல்டா அல்லாத மாவட்டங் களிலும் சாகுபடியை ஊக்குவிக்க, 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், ஒரு ஏக்கருக்கு இயந்திர நடவு சாகுபடி மானியமாக, 4,000 ரூபாயும், 50 சதவீத மானியத்தில் விதைகளும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. நடவு பணிகள் முடிந்த நிலையில், மானியம் விடுவிக்கப்படாமல் இருந்தது.

இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானது. இதை தொடர்ந்து, சாகுபடி மானியம் வழங்க, 80 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மானிய தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது.

Advertisement