ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாநகராட்சியில் அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சொத்துவரி முறைகேடு தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட வருவாய் உதவியாளர்களின் (பில் கலெக்டர்கள்) உத்தரவை ரத்து செய்யக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது.

இதில் அரசு ஊழியர் சங்கம், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம், வணிகவரி பணியாளர்கள் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்க இணை செயலாளர்கள் சர்புதீன், ராஜகோபால், ஜெயபால் பங்கேற்றனர்.

Advertisement