சரோஜா தேவி பெயரில் விருது முதல்வரிடம் நடிகை தாரா மனு

பெங்களூரு : 'நடிகை சரோஜா தேவி பெயரில், கன்னட திரைப்பட விருதுகள் வழங்கப்பட வேண்டும்' என, முதல்வர் சித்தராமையாவிடம், நடிகை தாரா கோரிக்கை வைத்துள்ளார்.
'அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி' உள்ளிட்ட புனை பெயர்களால் ரசிகர்களால் அழைக்கப்பட்ட, நடிகை சரோஜாதேவி கடந்த 14ம் தேதி மரணம் அடைந்தார். சரோஜாதேவியின் இழப்பு, கன்னட திரை உலகிற்கு ஈடு செய்யாத முடியாதது என்று, நடிகர், நடிகையர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு காவேரி இல்லத்தில், முதல்வர் சித்தராமையாவை, நடிகை தாரா நேற்று சந்தித்துப் பேசினார்.
'கன்னட திரைப்படத் துறைக்கு நடிகை சரோஜா தேவியின் பங்களிப்பு ஏராளம். பல நடிகையருக்கு அவர் ரோல்மாடலாக இருந்தார்' என்று கூறியதுடன், 'சரோஜாதேவி பெயரில் திரைப்பட விருதுகளை, வழங்க வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டார். தனது கோரிக்கையை, மனுவாக அளித்தார். மனுவை பெற்ற சித்தராமையா சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, முடிவு எடுப்பதாக கூறி உள்ளார்.
மேலும்
-
ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்
-
மிளகாய் பொடி துாவி டிரைவரிடம் ரூ.10.40 லட்சம் பறித்த 3 பேர் கைது
-
தமிழகத்தின் 6 மாவட்டஙகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
-
மன உளைச்சலால் பதவி விலக முடிவு: திருச்சி டி.எஸ்.பி., பரபரப்பு கடிதம்
-
தமிழகத்தில் உயர்கிறது தக்காளி விலை