அணைப்பட்டியில் மீன் பிடி திருவிழா 

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பருவ மழையை வரவேற்கும் விதமாகவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாகவும் அணைப்பட்டி பிரம்ம சமுத்திர குளத்தில் மீன் பிடி திருவிழா நடந்தது.

50 ஏக்கரில் உள்ள இக்குளத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குடகனாறு மூலம் தண்ணீர் வருகிறது.

இக்குளத்தில் ஆண்டுதோறும் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி குளக்கரையில் உள்ள கன்னிமார், கூத்த அப்புச்சி தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மீன்பிடித் திருவிழா நடந்தது.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கு மேற்பட்டோர் மீன்களை பிடித்தனர்.

சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை வலை வீசியும், கூடைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து சென்றனர்.

Advertisement