மண் வளத்தை மேம்படுத்த ஆலோசனை

கொட்டாம்பட்டி,: கொட்டாம்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்மணி தெரிவித்துள்ளதாவது:

மண் வளத்தை மேம் படுத்த ரசாயன உரம், பூச்சி மருந்து பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். கரிம உரங்களான தொழு, மண்புழு மற்றும் மட்கும் உரங்களை பயன்படுத்து வதால் பயிர்களுக்கு தேவையான ஊட்டச் சத்துகள் கிடைக்கும்.

பயிர் சுழற்சி முறையை பின்பற்றினால் பூச்சி நோய் தாக்குதல் குறைந்து அதிக விளைச்சல் பெறலாம். ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதன் மூலம் சாகுபடி செல வினத்தை குறைத்து சுற்றுச் சூழல் மாசடைவதை தவிர்க்கலாம். அடிக்கடி உழவு செய்தல், வடிகால் வசதியின்மை, கால்நடைகளை மேய்த்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் அரிப்பு, இறுக்கத்தை குறைக்கலாம் என்றார்.

Advertisement