ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்கள் கூட்டம்

மதுரை : மதுரையில் திருக்கோயில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் மாநில சிறப்புத் தலைவர் கோபாலகிருஷ்ணர் தலைமையில் நடந்தது.

துறைநிலை ஓய் வூதியம், பொங்கல் கருணைக்கொடை உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது. 2026 தேர்தல் அறிக்கை வெளியிடவுள்ள கட்சியினரிடம் மனு அளிப்பது என தீர் மானிக்கப்பட்டது.

பல்வேறு கோயில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதம் ஓய்வு பெற்ற பணி யாளர்களுக்கு வழங்கப் பட்டது. துணைத்தலைவர் கோவிந்தன் நன்றி கூறினார். பொதுச்செயலாளர் சந்திரசேகரன், மாநிலத் தலைவர் சொக்கலிங்கம், மோகன், சீனிவாச ரங்கன் கலந்து கொண்டனர்.

Advertisement