கொங்கணகிரி கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு

அனுப்பர்பாளையம்; திருப்பூர், காலேஜ் ரோடு கொங்கண கிரியில் புகழ் பெற்ற ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த பெருமான் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் அறங்காவலர்களாக மெஜஸ்டிக் கந்தசாமி, ராஜாமணி, துரைசாமி, மகேஸ்வரி, ஜீவானந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்வு அறநிலையத்துறை துணை ஆணையர் ஹர்சினி, மேற்பார்வையில், திருப்பூர் சரக கோவில்களின் ஆய்வாளர் மகேந்திரன், தக்கார் சபரீஸ்வரன், செயல் அலுவலர் பவானி ஆகியோர் முன்னிலையில் நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

அதில், தலைவராக மெஜஸ்டிக் கந்தசாமி, போட்டியின்றி ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு பாராட்டு விழா கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், கபடி கழக மாவட்ட தலைவர் ஜெயசித்ரா சண்முகம், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், கொங்கு அறக்கட்டளை செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சங்குராஜன், நல்லுார் ஈஸ்வரன் கோவில் தலைவர் முருகேஷ், ம.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், ஆடிட்டர் சின்னசாமி, ஆண்டிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மூர்த்தி, திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க சுற்றுச்சூழல் அமைப்பாளர் விஜய், மாவட்ட துணை செயலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்று அறங்காவலர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement