ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
கடலுார்: கடந்த காலத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகை படிப்படியாக வழங்கப்படுகிறது என, அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
மணல் குவாரிக்கு எதிரான போராட்ட வழக்கு தொடர்பாக எம்.எல்,ஏ., க்கள், எம்.பி., க்கள் வழக்கை விசாரிக்கும் கடலுார் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆஜரானார். பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுதும் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க நிதியில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அந்த தொகை செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார். தற்போது தமிழகத்தில் பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் 655 பேர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். மேலும் 3,200 பேர் சேர்க்கப்பட உள்ளனர். கடந்த காலத்தில் ஊழியர்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகை படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.
மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் எதுக்கு; மாணவர்கள் செயலால் டிரைவர்கள் தவிப்பு
-
அடுத்தடுத்த புயல்களால் பிலிப்பைன்சில் 25 பேர் பலி
-
சிறையிலிருந்து தப்பிய கைதி சில மணி நேரங்களில் கைது
-
பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.362 கோடி செலவு
-
தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்