போதைப்பொருள் விற்பனை ராஜஸ்தான் வாலிபர் கைது

சென்னை, போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த, ராஜஸ்தான் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பேரி உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஈ.வி.கே., சம்பத் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவரது உடமைகளை சோதனை செய்தபோது, 7 கிராம் கோகைன் போதைப் பொருள் வைத்திருந்தது தெரிந்தது.

மேலும் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சவுரவ் ல்யூக்டு, 36, என்பதும், போதைப்பொருள் விற்பனை செய்வதும் தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 7 கிராம் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

அண்ணாநகரில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த, தாம்பரத்தைச் சேர்ந்த கார்த்திக், 29, மேடவாக்கத்தைச் சேர்ந்த முகமது அசாருதின், 29, ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, இரு மொபைல்போன்கள், கே.டி.எம்.,பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement