திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்

புதுச்சேரி: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மாலையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார், 39; பொறியாளர். இவருக்கு மதுமிதா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகன் உள்ளார். சரவணகுமார், புதுச்சேரியில் உள்ள பான்லே நிறுவனத்திற்கு இயந்திரம் பொருத்துவதற்கு கடந்த 18ம் தேதி வந்தவர், அறை எடுத்து தங்கினார்.

சரவணகுமார் கிரிப்டோ கரன்சியில் ரூ. 20 லட்சம் முதலீடு செய்ய நண்பர், உறவினர்களிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 5:40 மணியளவில் வனத்துறை அலுவலகம் அருகில் ரயில்வே டிராக்கில் உடலில் காயங்களுடன் சரவணகுமார் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிந்து அவரது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் மொபைல் போனை வைத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி மதுமிதா கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கடன் தொல்லையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement