மாணவர் பேரவை துவக்க விழா

பல்லடம்; பல்லடம் அரசு கல்லுாரியில், மாணவர் பேரவைகள் துவக்க விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பகலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

முன்னதாக, பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி, மாணவர் பேரவையை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியருக்கு, பரிசுகள், சான்றுகள் வழங்கப்பட்டன. கணினி அறிவியல் துறை தலைவர் பேராசிரியை விமலா நன்றி கூறினார்.

Advertisement