பி.இ., - பி.எட்., முடித்தவர் பட்டதாரி ஆசிரியர் ஆகலாம்

சென்னை:பி.இ., - பி.எட்., முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற விதிக்கப்பட்டிருந்த தடை விலகி உள்ளது.

இளநிலை பொறியியல் படிப்புடன், ஆசிரியர் பயிற்சியும் முடித்தவர்களுக்கு, பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்குவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், கடந்த 2024, டிச., 10ம் தேதி நடந்த, சமநிலை பாடத்திட்டங்கள் குறித்த, 'ஈக்குவேலன்ட் கமிட்டி' கூட்டத்தில், அதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அறிவியல் பாடம் கற்ப்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சமமான கல்வி தகுதியாக, பி.இ., - பி.எட்., பட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

இதையடுத்து, பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியராக பணியாற்றலாம் என, உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement