குருணையுடன் கூடிய அரிசி இந்திய உணவு கழகம் விற்பனை
சென்னை:வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், மின்னணு ஏலமுறை வாயிலாக, 10 சதவீத குருணையுடன் உள்ள அரிசியை, வியாபாரிகள், மொத்த கொள்முதல் செய்யும் நபர்கள், அரிசி சார்ந்த உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு விற்க, இந்திய உணவு கழகம் முடிவு செய்துள்ளது.
இதை வாங்க விருப்பம் உள்ளவர்கள், தங்களின் விருப்பங்களை தெரிவிக்குமாறு, சென்னையில் உள்ள இந்திய உணவு கழக, தமிழக மண்டலப் பொது மேலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்திட்டத்தில், 10 சதவீத குருணையுடன், அரிசி ஆலைகளில் பட்டை தீட்டப்பட்ட அரிசியானது, 100 கிலோ எடை உடைய குவின்டால், 3,000 ரூபாய்க்கு, அக்.,31 வரை விற்கப்பட உள்ளது. இந்த அரிசி, நவ., 1 முதல், 2026 ஜூன்., 30 வரை, 3,090 ரூபாய்க்கு விற்கப்படும்.
மேலும், குருணை அரிசி, அக்., 31 வரை, குவின்டால், 2,250 ரூபாய்க்கும், நவ., முதல், 2026 ஜூன், 30 வரை, 2,320 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள், அதற்கான படிவத்தை, 'www.fcigov.in' இந்திய உணவு கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட முழு விபரங்களுடன், சென்னை மண்டல அலுவலகத்திற்கு, 'agmcomltn.fci@gov.in' மின்னஞ்சலுக்கு வரும், 29க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும்
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
-
லஞ்ச வழக்கில் சிக்கிய 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்' புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
-
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்
-
ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்
-
மிளகாய் பொடி துாவி டிரைவரிடம் ரூ.10.40 லட்சம் பறித்த 3 பேர் கைது