காரைக்குடியில் 30 பவுன் கொள்ளை

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் ஜெய்ஹிந்த் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் தியாகு 50. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். சென்னையில் தொழில் செய்து வரும் இவர் காரைக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.

தியாகு ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பக்க கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசில் புகார் அளிக்கப்பட்டு ஆய்வு செய்தபோது வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

Advertisement