ஆன்லைனில் முதலீடு ரூ.21 லட்சம் மோசடி
சிவகங்கை:காரைக்குடியில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி அதியமான் தெரு ராஜாராம் மகன் தென்னவன் 34. தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது போனிற்கு வாட்ஸ் ஆப்பில் பகுதி நேர வேலை விளம்பரம் வந்துள்ளது. அந்த எண்ணை தென்னவன் தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறியுள்ளார். அதை நம்பி தென்னவன் அவர் கூறிய வங்கி கணக்கில் 20 பரிவர்த்தனையில் ரூ.11 லட்சத்து 33 ஆயிரத்து 167 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் லாபத்தை கொடுக்கவில்லை. தென்னவன் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்துாரை சேர்ந்தவர் 41 வயது பெண். இவர் காரைக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் பகுதி நேர வேலை விளம்பரம் வந்துள்ளது. அந்த பெண்ணும் விளம்பரத்தில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் வீட்டில் இருந்தே அதிக லாபம் பெறமுடியும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய அந்த பெண் 11 வங்கி கணக்கில் 12 பரிவர்த்தனையில் ரூ.10 லட்சத்து 61 ஆயிரத்து 200 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் முதலீடு செய்ததற்கான லாபத்தொகை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். அந்தபெண் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
-
லஞ்ச வழக்கில் சிக்கிய 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்' புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
-
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்
-
ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்
-
மிளகாய் பொடி துாவி டிரைவரிடம் ரூ.10.40 லட்சம் பறித்த 3 பேர் கைது