சோழர் அருங்காட்சியகம் முதல்வர் பெருமிதம்
'கங்கைகொண்ட சோழபுரத்தில், சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறை சாற்றும் அருங்காட்சியகம், காண்போரை கவர்ந்திடும் வண்ணம் எழுந்து வருகிறது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவு:
கங்கைகொண்டான், கடாரம் கொண்டான் என, பெரும் புகழ் எய்திய தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை, அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாட, 2021ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது தி.மு.க., அரசு.
ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக, அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரை கவர்ந்திடும் வண்ணம், அது எழுந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ராஜேந்திர சோழனின் பிறந்த நாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள மேம்பாட்டு பணிகளும், சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும் என, அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
-
லஞ்ச வழக்கில் சிக்கிய 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்' புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
-
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்
-
ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்
-
மிளகாய் பொடி துாவி டிரைவரிடம் ரூ.10.40 லட்சம் பறித்த 3 பேர் கைது