மேலும் ஒரு வழக்கு

சதீஷ்குமார், தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து, சண்டையிட்டு கொடுமைப்படுத்துவதாக, கடந்தாண்டு இறுதியில், போலீஸ் கமிஷனரகத்தில் ரெபேக்கா புகார் அளித்தார்.

அதன்படி, ஓட்டேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். ஆறு நாட்கள் சிறையில் இருந்த சதீஷ்குமார், ஜாமினில் வெளியே வந்து, ரெபேக்காவிடம் இருந்த ஆறு வயது பெண் குழந்தையை, கடந்த 20ம் தேதி, தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

அன்று இரவு, மது குடித்து விட்டு ரெபேக்கா வீட்டுக்கு சென்ற சதீஷ்குமார், தகராறு செய்து, ரெபேக்காவை கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவரிடம் விவாகரத்து கோரிய ரெபேக்காவை, 21ம் தேதி காலை, வேலைக்கு போகும் வழியில் மறித்து, சதீஷ்குமார் தாக்கியுள்ளார். மேலும், சதீஷ்குமாரின் தாய் ரஞ்சனி, மொபைல் போனில் அவதுாறாக பேசியுள்ளார்.

இதுகுறித்து, ரெபேக்கா ஓட்டேரி காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரின்படி, சதீஷ்குமார் மற்றும் அவரது தாய் ரஞ்சனி மீது, வரதட்சனை மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement