இளையராஜா பெயர் நீக்கம் ஐகோர்ட்டில் வனிதா தகவல்
சென்னை:நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி யுள்ள, மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜா பெயரை நீக்கி விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம், மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில், இளையராஜா இசையமைத்த, மைக்கேல் மதன காமராஜன் படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தன் அனுமதியின்றி, அப்பாடலை பயன்படுத்தி உள்ளதாகவும், பாடலை மாற்றி அமைத்து உள்ளதாகவும், இளையராஜா தரப்பில், சிவில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜராகி, ''காப்புரிமை சட்ட விதிகளை மீறி, பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் இளைய ராஜா பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்,'' என, வாதாடினார்.
நடிகை வனிதா தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆஜராகி, ''எக்கோ நிறுவனத்திடம் இருந்து, இளையராஜாவின் 4,850 பாடல்களை, 'சோனி மியூசிக்' வாங்கி உள்ளது. அவர்களிடம் இருந்து, பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளோம். படத்தில் இளையராஜா பெயர் நீக்கப்பட்டு விட்டது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில், சோனி மியூசிக் நிறுவனத்தையும் சேர்க்க உத்தரவிட்டு, ஆக., 18ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
மேலும்
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்
-
லஞ்ச வழக்கில் சிக்கிய 2 எஸ்.ஐ.,க்கள் 'சஸ்பெண்ட்' புதுச்சேரி டி.ஜி.பி., அதிரடி உத்தரவு
-
இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்
-
ஓய்வூதியர்களுக்கு வழங்க நிதி இல்லை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
மாணவியை பிளேடால் கிழித்து முகமூடி நபர்கள் அட்டகாசம்
-
மிளகாய் பொடி துாவி டிரைவரிடம் ரூ.10.40 லட்சம் பறித்த 3 பேர் கைது