பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது

கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம், விக் கிரவாண்டி போலீஸ் சரகம் எம்.குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சரசு, 57; இவர், கடந்த 20ம் தேதி மதுரப்பாக்கம் குச்சிப்பாளையத்தில் இருந்து தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்றார்.
கொடுக்கூர் ஏரிக்கரை சாலையில் உள்ள பிள்ளையார்கோவில் அருகே வேகத்தடையை கடக்க முயன்றபோது, பின்னால் அவர்களை கண்காணித்து வந்த ஒரு வாலிபர் சரசு கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறித்தார். அவர் சுதாரித்து செயினை இறுக பிடித்தார். ஆனாலும், 2 சவரன் அளவிற்கு செயினை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் தப்பிச்சென்றுவிட்டார்.
இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, வளவனுார் போலீஸ் சரகம் குமளம் மேட்டுத்தெருவை சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் 23; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 சவரன் செயின், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
தங்கம் விலை இன்றும் குறைவு; 2 நாளில் மட்டும் ரூ.1,360 சரிவு
-
அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி; ராஜஸ்தானில் சோகம்
-
கேரளாவில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
-
கிரிக்கெட் வீரர் யாஷ்தயாள் கைதாவாரா ?
-
கோல்ட் ப்ளே இசை நிகழ்ச்சி வீடியோவால் வந்த வம்பு; சி.இ.ஓ.,வைத் தொடர்ந்து ஹெச்.ஆர்., ராஜினாமா!
-
தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி கேட்ட சிறுமி; தாயை கண்டித்த உச்ச நீதிமன்றம்