கிரிக்கெட் வீரர் யாஷ்தயாள் கைதாவாரா ?

ஜெய்ப்பூர்: கிரிக்கெட் வீரர் யாஷ்தயாள் மீது மேலும் ஒரு செக்ஸ் புகார் வழக்கு பதியப்பட்டு உள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கு இருப்பதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியன் கிரிக்டெ் பிரீமியர் லீக் ராயல் சேலஞ்சர் அணியின் வீரராக ஆடி வருபவர் யாஷ்தயாள். இவர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காஸியாபாத்தில் ஒரு இளம்பெண், தயாள் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பலமுறை ஏமாற்றி உடல் ரீதியாக துன்புறுத்தினார் என்று புகார் அளித்தார். இந்த புகாரில் கோர்ட்டுக்கு சென்ற தயாள் போலீஸ் விசாரணைக்கு தடை பெற்றார்.
2வது செக்ஸ் புகார்
இந்நிலையில் ஜெய்ப்பூரில் கிரிக்கெட் போட்டி நடந்த போது ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி செக்ஸ் தொந்தரவு செய்துள்ளார். இவர் தற்போது அளித்த புகாரின்படி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் யாஷ்தயாள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.



மேலும்
-
சங்கராபுரம் சார்பு நீதிமன்றம் திறப்பு
-
மீனவர் விடுதலை வேங்கைகள் ஆர்ப்பாட்டம்
-
டாக்டர் வீட்டில் 97 சவரன் ரூ.10 லட்சம் கொள்ளை
-
பெண் போலீசின் 30 சவரன் திருட்டு சக போலீஸ்காரர்-, நண்பர் கைது
-
தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
அங்காளம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது... எப்போது? மேல்மலையனுாரில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்