விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

புதுடில்லி: பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதித்து இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளதை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
ஷேக் ஹசினா பிரதமராக இருந்தவரையில் வங்கதேசம் இந்தியாவின் நட்பு நாடாக திகழ்ந்து வந்தது. ஆனால், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பிறகு, வங்கதேசம் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பல்வேறு விவகாரங்களில் நெருக்கம் காட்டி வரும் இரு நாடுகளும், தற்போது புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளன. அதாவது, இருநாடுகளைச் சேர்ந்த தூதரக மற்றும் உத்தியோகப்பூர்வ பாஸ்போர்ட்டை வைத்துள்ளவர்ளுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதி வழங்கி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஒப்பந்தம் செய்துள்ளன.
டாக்காவில் நடந்த உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி மற்றும் வங்கதேசத்தின் உள்துறை அமைச்சர் ஜஹாங்கிர் அலாம் சவுத்ரி முன்னிலையில் நேற்று முன்தினம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் பாகிஸ்தானும், சொந்த நாட்டில் ஹிந்துக்கள் மீது மனித உரிமை மீறல் சம்பவங்களால் திளைக்கும் வங்கதேசமும் ஏற்படுத்தியுள்ள இந்த ஒப்பந்தத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.















மேலும்
-
படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் எதுக்கு; மாணவர்கள் செயலால் டிரைவர்கள் தவிப்பு
-
அடுத்தடுத்த புயல்களால் பிலிப்பைன்சில் 25 பேர் பலி
-
சிறையிலிருந்து தப்பிய கைதி சில மணி நேரங்களில் கைது
-
பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.362 கோடி செலவு
-
தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்
-
மாலத்தீவுக்கு ரூ.5,000 கோடி கடன் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு