நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 24) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் கன்னியப்பன், 28. இவர் 2017 நவம்பரில், 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அரக்கோணம் டவுன் போலீசார், கன்னியப்பனை போக்சோவில் கைது செய்தனர். ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை, மாவட்ட அமர்வு நீதிபதி செல்வம், கன்னியப்பனுக்கு, 10 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
மின்வாரிய ஊழியர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், மங்களம் அடுத்த ஆரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 33; சேத்துப்பட்டு மன்சூராபாத் மின்வாரிய அலுவலகத்தில் ஹெல்பராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் தச்சூர் பஸ் நிறுத்தத்தில், அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவியை, 'லிப்ட்' தருவதாக பைக்கில் அழைத்துச் சென்று, வழியில் தொல்லை கொடுத்துள்ளார்.
பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து, ஆரணி மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை, போக்சோவில் கைது செய்தனர்.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு
மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியராக உள்ளார். இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வேலைக்கு செல்கிறார். தற்போது 20 வயதான இரண்டாவது மகள் 2023ல் மதுரை அரசு பாலிடெக்னிக் மகளிர் கல்லுாரியில் சேர்ந்தார். அந்த விடுதியில் தங்கி படித்தார்.
விடுமுறையில் வீட்டிற்கு வரும்போது தனிமையில் இருப்பதை கண்டு சந்தேகமடைந்து அவரது தாய் விசாரித்தபோது, கல்லுாரி ஆசிரியை நினைவாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அந்த ஆசிரியையும் அடிக்கடி மாணவி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
பின்னர் கல்லுாரி படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் பாதியில் நிறுத்திவிட்டு கடந்தாண்டு கோவை மில் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வேலை செய்ய பிடிக்கவில்லை என்று கூறி வீட்டிற்கு திரும்பினார். அவருக்கு அரசு மருத்துவமனையில் மனநல கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது போது அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.
அவர் தெரிவிக்கையில், ''நானும், ஆசிரியையும் 2023 ஆகஸ்ட் முதல் 2024 மார்ச் வரை தனியாக இருக்கும்போது அடிக்கடி முத்தம் கொடுத்து கொள்வோம். அவர் நினைவாகவே உள்ளது. அவரை விட்டு பிரிந்திருக்க முடியவில்லை'' என்று அழுதுள்ளார்.
அவரது தாயார் புகாரில் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின்கீழ் அனைத்து நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


மேலும்
-
படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் எதுக்கு; மாணவர்கள் செயலால் டிரைவர்கள் தவிப்பு
-
அடுத்தடுத்த புயல்களால் பிலிப்பைன்சில் 25 பேர் பலி
-
சிறையிலிருந்து தப்பிய கைதி சில மணி நேரங்களில் கைது
-
பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.362 கோடி செலவு
-
தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்
-
மாலத்தீவுக்கு ரூ.5,000 கோடி கடன் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு