நீண்ட காலம் பிரதமர் பதவி: இந்திராவை பின்னுக்கு தள்ளினார் மோடி

புதுடில்லி: நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் பட்டியலில், இந்திராவை பின்னுக்குத் தள்ளி, 2வது இடத்திற்கு பிரதமர் மோடி முன்னேறினார்.
ஜனவரி 24ம் தேதி, 1966ம் ஆண்டு முதல் மார்ச் 24ம் தேதி, 1977ம் ஆண்டு வரை 4077 நாட்கள் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த இந்திராவின் சாதனையை இன்று பிரதமர் மோடி முறியடிக்கிறார்.
முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு மோடி, காங்கிரஸ் அல்லாத பிரதமரில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் மற்றும் உயர் பதவியில் இரண்டு முழு பதவிக்காலங்களை நிறைவு செய்துள்ளார்.
இந்திராவுக்கு பிறகு, பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தற்போதைய பிரதமர் மோடி 2002, 2007, 2012ல் குஜராத் தேர்தல்களிலும், பின்னர் 2014, 2019 மற்றும் 2024ல் லோக்சபா தேர்தல்களிலும் வெற்றி பெற்று, முதல் இடத்தில் உள்ளார்.
பிரதமர் மோடி இன்றுடன், ஒரு மாநிலத்திலும், மத்தியிலும் 24 ஆண்டுகள் அரசாங்கத்தை வழி நடத்தியதற்கான மைல்கல்லை எட்டியுள்ளார்.

















மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
படிக்கும் வயசில் படிக்கட்டு பயணம் எதுக்கு; மாணவர்கள் செயலால் டிரைவர்கள் தவிப்பு
-
அடுத்தடுத்த புயல்களால் பிலிப்பைன்சில் 25 பேர் பலி
-
சிறையிலிருந்து தப்பிய கைதி சில மணி நேரங்களில் கைது
-
பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.362 கோடி செலவு
-
தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்