துணை முதல்வர் பதவி குறித்து நான் தான் முடிவு செய்ய வேண்டும்: சொல்கிறார் துரைமுருகன்

25


வேலூர்: '' துணை முதல்வர் பதவியில் இருப்பதா இல்லையா என்பது குறித்து நான் தான் முடிவு செய்ய வேண்டும். இ.பி.எஸ்., அல்ல, '' என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


காட்பாடியில் நிருபர்களை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர் ஒருவர்,' சட்டசபையில் அதிக காலம் இருந்தவர், மூத்த அமைச்சர். திமுகவுக்காக சிறை சென்றவர் துரைமுருகன். அவருக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை. மகன் உதயநிதிக்கு மட்டும் கொடுத்துள்ளனர். இது தான் நாடு போற்றும் நான்கு ஆண்டு மகத்தான சாதனையா என இபிஎஸ் பேசுகிறார்' என கேள்வி எழுப்பினார்.



இதற்கு பதிலளித்த துரைமுருகன்,' அந்த பதவியில் நான் இருக்கிறதா இல்லையா என நான் முடிவு செய்ய வேண்டியது. அவர் இல்லை' என பதிலளித்தார்.

மேலும் மற்றொரு கேள்விக்கு, ' ஒரு தொகுதியில் எப்படி இத்தனை முறை வெற்றி பெற முடிகிறது என பலர் கேட்கின்றனர். நீங்கள் தொகுதியை தொகுதியாக பார்க்கின்றீர்கள். நான் கோவிலாக பார்க்கின்றேன்.எனக்கு ஓட்டுப் போட்டவர்கள் என் கண்ணுக்கு தெரிந்த தெய்வங்கள்.தொகுதியில் திரும்ப வெற்றி பெற உண்மையாக இருக்க வேண்டும். எம்எல்ஏக்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஊழல் இல்லாமல் வாழ்ந்துள்ளேன். எனது வாழ்க்கை சுத்தமான வாழ்க்கை என்றார்.

Advertisement