பார்ட்டிக்கு ஏற்ற சீஸ் பன்னீர் ரோல்

வீட்டுக்கு திடீர் விருந்தாளி வந்தால், டிபனுக்கு என்ன செய்யலாம் என்ற குழப்பம் ஏற்படும். புதுமையான சீஸ் பன்னீர் ரோல் ட்ரை செய்யுங்கள்.

செய்முறை முதலில் ஒரு கிண்ணத்தில், கோதுமை மாவை போட்டு, சிறிது நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைய வேண்டும். இதை அரை மணி நேரம் ஊற விடுங்கள். வேறொரு கிண்ணத்தில் துருவிய பன்னீர், சிறிதாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகு துாள், குட மிளகாய் போட்டு நன்றாக கிளறவும்.

ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை, மேலும் நன்றாக பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக்கவும். இவற்றை சப்பாத்தி போன்று தட்டவும். ஒரு சப்பாத்தி மீது எண்ணெய் தடவி, பன்னீர் கலவையை சிறிதளவு வைத்து, ரோல் செய்யவும். இதே போன்று அனைத்து உருண்டைகளிலும் செய்து கொள்ளவும்.


அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடானதும் பன்னீர் ரோல்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால், சீஸ் பன்னீர் ரோல் தயார். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அல்லது கிரீன் சட்னி, பொருத்தமாக இருக்கும். பார்ட்டிக்கு ஏற்றது. சுவையும் வித்தியாசமாக இருக்கும். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும்

- நமது நிருபர் - .

Advertisement