இனிப்பும், காரமும் கலந்த 'ஹனி கார்லிக்' சிக்கன்

அனைவருக்கும் பிடித்த அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். இந்த சிக்கனை வைத்து பல வித டிஸ்கள் செய்யலாம். இருப்பினும், பெரும்பாலான வீடுகளில் சிக்கன் 65, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என மூன்றையே திரும்பி, திரும்பி செய்து கொண்டே இருப்பீர்கள். இதற்கு மாற்றாக, புதுமையான அதீத சுவை கொண்ட 'ஹனி கார்லிக் சிக்கன்' செய்து சாப்பிடுங்கள்.

செய்முறை முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய சிக்கன்களில் உப்பு, மிளகு துாள், சில்லி பிளேக்ஸ், பூண்டு பொடி, சோள மாவு சேர்த்து நன்கு கலந்து ஊற வைத்து கொள்ளவும்.

இதையடுத்து, ஒரு கிண்ணத்தில் சோயா சாஸ், வினிகர், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு துாள் மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின், ஒரு வாணலியில் வெண்ணெய், எண்ணெய் இரண்டையும் ஊற்ற வேண்டும். இதில், ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.

இந்த வாணலியில் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிக்கனை சேர்த்து வதக்க அதனுடன் ஏற்கனவே ஒரு கிண்ணத்தில் கலந்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு வதக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும் தேன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.


பின் வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஹனி கார்லிக் சிக்கன் தயார். இந்த சிக்கனை சுவைக்கும் போது, இனிப்பும் காரமும் கலந்ததாக இருக்கும். அத்துடன் பூண்டின் மணமும் வீசும்.

- நமது நிருபர் -

Advertisement