வீடு கட்டுவதற்கு பிரிகாஸ்ட் பாகங்களை வாங்குவதில் கவனிக்க...

கட்டுமான துறையில் நாள்தோறும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வரும் நிலையில் அதை பயன்படுத்துவதில் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி அதிக உயரமான கட்டடங்களை மிக குறுகிய காலத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.
அதே நேரம், அதிக உயரமான கட்டடங்கள் கட்டும் போது இயல்பாக ஏற்படும் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, கான்கிரீட் கட்டடத்தில் ஒவ்வொரு பாகத்துக்குமான சுமை என்ன அதை எப்படி மேலாண்மை செய்வது என்பதில் கவனமாக செயல்பட வேண்டும்.
இதில் வழக்கமான முறையில் அதிக உயரமான கட்டடங்கள் கட்டும் போது அதில் ஏற்படும் சுமையின் அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சுமை பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை எப்படி கடை பிடிக்கபோகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இதற்காக அதிக ஆழத்தில், உயர்தர முறையில் அஸ்திவாரம் அமைப்பதும், தரமான கம்பிகளை, கான்கிரீட்டை பயன்படுத்தி துாண்கள், பீம்கள் அமைத்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், உயரமான கட்டடங்களின் நிலைப்பு தன்மையை உறுதி செய்ய இது மட்டும் போதுமானதாக இருக்காது.
இதனால், கட்டடங்களில் சுமையை குறைக்கும் வகையிலும், பணி காலத்தை குறைக்கும் விதமாக பிரிகாஸ்ட் எனப்படும் முன்தயாரிப்பு கட்டுமான முறை அறிமுகமாகி உள்ளது. வடிவமைப்பு நிலையில் கட்டடம் பல்வேறு பாகங்களாக பிரிக்கப்படும்.
இதன் அடிப்படையில் கட்டடத்தின் ஒவ்வொரு பாகமும் பிரிகாஸ்ட் முறையில் அதற்கான நிறுவனம் வாயிலாக தயாரிக்கப்படும். இதில் உங்கள் கட்டடத்தின் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு அதன் அடிப்படையில் புதிதாக பிரிகாஸ்ட் பாகங்கள் தயாரிக்கப் படுகிறதா என்று பாருங்கள்.
இவ்வாறு, பிரிகாஸ்ட் முறையில் பாகங்கள் தயாரிக்கும் போது அதில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கான விளக்க அறிக்கை பெற வேண்டும். குறிப்பாக, இந்த பாகங்களில், மின்சார இணைப்பு போன்றவற்றுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
உங்கள் வீட்டுக்கான கட்டட பாகங்கள் பிரிகாஸ்ட் முறையில் எங்கு தயாரிக்கப்படுகிறது, அங்கிருந்து கட்டமான இடத்துக்கு இடைபட்ட தொலைவு என்ன என்பது போன்ற விஷயங்களை பார்க்க வேண்டும். இது போன்ற பாகங்கள் தயாரிக்கப்பட்டு, கொண்டு வரப்பட்டு, இணைக்கும் நிலையில், உடைப்புகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
தயாரிப்பு, இணைப்பு நிலையிலேயே சிறிய அளவில் உடைப்புகள் இருந்தாலும், அதை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்காதீர். இது விஷயத்தில் உரிமையாளர்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.
மேலும்
-
மும்பையில் பெரும் விபத்து: கட்டுப்பாட்டை இழந்த டிரக் மோதி 20 வாகனங்கள் சேதம்
-
தாய்லாந்து- கம்போடியா மோதல்: நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
மஹாராஷ்டிராவில் கனமழைக்கு 4 பேர் பலி,461 வீடுகள் சேதம்
-
கோப்பை வென்றது நியூசிலாந்து: தென் ஆப்ரிக்கா அதிர்ச்சி
-
இந்தியாவுக்கு 2 வெண்கலம்: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
-
சாத்விக்-சிராக் ஜோடி ஏமாற்றம்: சீன ஓபன் பாட்மின்டனில்