கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

சேலையூர், சேலையூர், ராஜாஜி நகர், 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர், 38. அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 43. இருவரும் பெயின்டிங் வேலை செய்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன், சங்கர், 10,000 ரூபாய் கடனாக பாலகிருஷ்ணனுக்கு கொடுத்துள்ளார். நேற்று முன்தினம், கொடுத்த பணத்தை சங்கர் திருப்பி கேட்டுள்ளார். அப்போது, பாலகிருஷ்ணன் போதையில் இருந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், காய்கறி வெட்டும் சிறிய கத்தியை எடுத்து, சங்கரின் வயிற்றில் குத்தியுள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், காயமடைந்த சங்கரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவருக்கு தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கத்தியால் குத்திய பாலகிருஷ்ணன் தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement