குப்பையால் பாதிக்கும் குழந்தைகள்

சோழவந்தான்: தேனுாரில் அங்கன்வாடி மையம் அருகே குப்பையை கொட்டுவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

இங்குள்ள பால் பண்ணை ஸ்டாப் அருகே அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. ஏராளமான குழந்தைகள் இங்கு வருகின்றனர். இதன் அருகே ரோட்டோரம் பலர் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பலத்த காற்று வீசும் போது குப்பை பறந்து ரோடு, அங்கன்வாடி மையத்திற்கு பரவுகின்றன. குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

அடிக்கடி குப்பையை எரிப்பதால் வெளியேறும் புகை குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. வாகன ஓட்டிகளின் கண்களில் புகை எரிச்சலை உண்டாக்குவதால் வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement