இடும்பன் குளத்தில் மோட்டார் வைத்து தண்ணீர் திருட்டு

பழநி: பழநி இடும்பன் குளத்தில் தண்ணீர் வற்றி உள்ள நிலையில் சிறிதளவு நீரையும் மோட்டார் மூலம் திருட்டு நடக்கிறது

பழநி இடும்பன் குளம் பல நுாறு ஏக்கர் கொண்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக பயன்படுகிறது . தற்போது மழை குறைவாக உள்ளதால் குளத்திற்கு போதிய நீர் வரத்து இல்லை.

இதனால் குளத்தில் போதிய தண்ணீரும் இல்லை.பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இடும்பன் குளத்தில் நீராடி செல்வது வழக்கம். தற்போது தண்ணீர் குறைவாக உள்ளதால் பாதிக்கின்றனர். இதனிடையே ஆங்காங்கே தேங்கிய தண்ணீரை சிலர் மோட்டார் வைத்து திருடி வருகின்றனர். இதனை பொதுப்பணி துறையினர் கண்டுக்காது வேடிக்கை பார்க்கின்றனர். இதன் மீது துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement