மழை வேண்டி பூஜை

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி ஆதி சுயம்பு ஈஸ்வரர் -அபிராமி கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

அம்பாள், சுவாமிக்கு 27 குடம் மஞ்சள் நீர் தீர்த்தம் அபிஷேகம் செய்து ,மழை வேண்டி பதிகம் பாட பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், சிவபுராணம், பூஜை கயிறு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி உதயகுமார், சிவாச்சாரியார், அர்ச்சகர் வீரசபரி செய்திருந்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement