நத்தம் கல்லுாரியில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்

நத்தம்:நத்தம் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நத்தம் மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார்.

தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், நகர செயலாளர் ராஜ்மோகன், மாநில மாணவரணி துணை செயலாளர் வீரமணி, தொகுதி தேர்தல் பார்வையாளர் ரஞ்சன்துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிவா முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ் முத்துகிருஷ்ணன் உட்பட தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement