வசதி இல்லா அரசு அலுவலக வளாகம்

பழநி: பழநி தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஒன்றிய அலுவலகம், புள்ளியியல் துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, கிளைச் சிறை, பத்திரப்பதிவு அலுவலகம் ,கருவூலம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன . தினமும் பல்வேறு பணி நிமித்தமாக நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அரசு அலுவலக வளாகத்தில் குடிநீர், கழிப்பறை, பார்க்கிங் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. இதனால்இங்கு வரும் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

அரசு அலுவலகங்களுக்கு வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

வருவாய்த் துறையினர் அலுவலகத்திற்கு பின்புறம் சேதமடைந்துள்ள கழிப்பறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு பொது கழிப்பறை ,குடிநீர் வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement