மக்கள் மன்றம் நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது.

இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் கலந்து கொண்டு புகார் தெரிவித்தனர். பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 18 மொபைல் போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசார் கூறுகையில், 'வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், யூடியூப், வரும் உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம்.

அந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்தால் உங்களுடைய செல்போன் ஹேக் செய்யப்பட்டு உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும். உங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவார்கள். ஆகையால் இன்ஸ்டா லோன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம்.

வாட்ஸ் அப்பில் வரும் உங்கள் வங்கி கணக்கை சரி பார்க்க வரும் லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி தெரியாமல் நீங்கள் பதிவிறக்கம் செய்து விட்டால் வங்கி கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்தால் பணம் இழக்க நேரிடும்.

மேலும் இணைய வழி குற்றம் தொடர்பான புகார்கள் இருந்தால் இலவச தொலைபேசி எண் 1930 மற்றும் 0413- - 2276144, 9489205246 மற்றும் மின்னஞ்சல் cybercell-police@py.gov.in, www.cybercrime.gov.in மூலம் புகார் அளிக்கலாம்.

Advertisement