பாரதம் என்றே அழைக்க வேண்டும்: மோகன் பகவத் வலியுறுத்தல்

கொச்சி: '' பாரதம் என்பது பெயர்ச்சொல். அதனை மொழி பெயர்க்கக்கூடாது. எழுதும் போதும், வாசிக்கும் போதும் பாரதத்தை பாரதம் என்றே குறிப்பிட வேண்டும்,'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய கல்வி தொடர்பான மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:
ஒருவர் எந்த இடத்திலும் தனியாக வாழ உதவுவதாக கல்வி இருக்க வேண்டும். ஒருவர் வாழ்க்கையில் சுயமாக நிற்கவும், உங்கள் குடும்பத்தை அப்படியே வைத்திருக்கவும் முடியும் என்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.
மற்றவர்களுக்காக தியாகம் செய்வதையும், வாழ்வதையுமே 'பாரதிய' கல்வி கற்பிக்கிறது. ஒருவர் சுயநலமாக இருக்க கற்றுக் கொடுத்தால் அது கல்வி கிடையாது. அதிகாரத்தையே உலகம் புரிந்து கொள்கிறது. இதனால், பொருளாதார ரீதியில் பாரதம் வலிமையானதாகவும், செல்வந்தராகவும் இருக்க வேண்டும்.
பாரதம் என்பது பெயர்ச்சொல். அதனை மொழி பெயர்க்கக்கூடாது. பாரதம் என்றால் இந்தியா என்பது உண்மைதான். ஆனால்தான், எழுதும்போதும், வாசிக்கும் போதும் பாரதம் என்பதை பாரதமாக இருக்க வேண்டும். பாரதம் பாரதமாகவே குறிப்பிட வேண்டும். பாரதம் என்ற அடையாளம் மதிக்கப்படுகிறது. ஏனென்றால் அது பாரதம். நீங்கள் உங்கள் அடையாளத்தை இழந்தால், உங்களிடம் வேறு எந்தத் தகுதி இருந்தாலும் உலகில் எங்கும் மதிக்கப்பட மாட்டீர்கள். பாதுகாப்பாக இருக்க மாட்டீர்கள். இதுதான் பொதுவிதி.
தற்போதும், வளர்ந்த பாரதம், விஸ்வகுரு பாரதம் போருக்கு காரணமாக இருக்காது. போரை துவக்காது. மெக்சிகோ முதல் சைபீரியா வரை சென்றுள்ளோம். வெறும் காலில் நடந்துள்ளோம். சிறிய படகில் பயணித்துள்ளோம். நாங்கள் யாருடைய பிரதேசத்தையும் ஆக்கிரமித்து அழிக்கவில்லை. யாருடைய ராஜ்யத்தையும் நாங்கள் அபகரிக்கவில்லை. அனைவருக்கும் நாகரிகத்தை கற்றுக் கொடுத்தோம். இந்திய அறிவின் பாரம்பரியத்தை நீங்கள் காண்கிறீர்கள். மரபின் வேர் அந்த உண்மையில் உள்ளது.
சனாதன தர்மம் எழுச்சி பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். சனாதன தர்மம் எழுச்சி பெற, ஹிந்து தேசத்தின் எழுச்சி தவிர்க்க முடியாதது என்று யோகி அரவிந்த் கூறினார். இவை அவரது வார்த்தைகள், இன்றைய உலகிற்கு இந்த தொலைநோக்குப் பார்வை தேவை என்பதை நாம் காண்கிறோம். எனவே, முதலில் பாரதம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


மேலும்
-
பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்கள் எங்கே : வாக்காளர் பட்டியல் குறித்து எழும் கேள்வி
-
பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தில் பலனடைந்த 14 ஆயிரம் ஆண்கள் மஹாராஷ்டிராவில் புது மோசடி
-
திவ்யா-ஹம்பி மீண்டும் 'டிரா': உலக கோப்பை செஸ் பைனலில்
-
வெள்ளி வென்றார் அன்கிதா: உலக பல்கலை., தடகளத்தில்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
இந்தியாவுக்கு 21 பதக்கம்: பிரிட்டிஷ் பாரா பாட்மின்டனில்