ஊழியரை தாக்கிய புலி; திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையில் சம்பவம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையில், ஊழியரை புலி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



திருவனந்தபுரத்தில் மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்குள்ள புலி கூண்டில் உள்ள தண்ணீரை கம்பிக்கு வெளியே இருந்த படி, அங்கு பணிபுரியும் ஊழியர் ராமச்சந்திரன் என்பவர் சுத்தம் செய்ய முயன்று உள்ளார். அப்போது அங்கே இருந்த பெண் புலி, அவரை கடுமையாக தாக்கி உள்ளது.


இதில், அந்த ஊழியருக்கு தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.


இதுகுறித்து மிருகக்காட்சி சாலையின் இயக்குநர் மஞ்சு தேவி கூறியதாவது; காயம்பட்ட ராமச்சந்திரன் மேற்பார்வையாளராக இருக்கிறார். புலி கூண்டின் பொறுப்பாளரும் அவரே.


புலி தாக்கியது எதிர்பாராத ஒன்று. கூண்டிற்குள் குடிநீரை மாற்ற அவர் முயன்ற போது புலி தாக்கி இருக்கிறது என்றார்.

Advertisement