இந்திய ஹாக்கி '100': நவம்பர் 7ல் கொண்டாட்டம்

மகாபலிபுரம்: இந்திய ஹாக்கி அமைப்பின் 100வது ஆண்டு கொண்டாட்டம், வரும் நவ. 7ல் நாடு முழுவதும் நடக்கவுள்ளது.
ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) அமைப்பு 1925, நவ. 7ல், குவாலியரில் துவங்கப்பட்டது. இது, இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் தேசிய விளையாட்டு அமைப்பு. கடந்த ஆண்டு நவ. 7ல், இந்த அமைப்பு 100வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் பல்வேறு புதிய தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை, மகாபலிபுரத்தில் ஹாக்கி இந்தியாவின் 15வது கூட்டம் நடந்தது. இதில் 100வது ஆண்டு கொண்டாட்டத்தை நாடு முழுவதும் நடத்துவது, மாநில சங்கங்களுக்கான நிதி வழங்குவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
இதன்படி, சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் தொடரை நடத்திட ரூ. 70 லட்சம், ஜூனியர், சப்-ஜூனியர் தொடரை நடத்த ரூ. 30 லட்சம் வழங்கப்பட உள்ளது. மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வரும் நவ. 7ல் நாடு முழுவதும் 100வது ஆண்டு கொண்டாட்டம் நடத்தப்படும். இதில் ஒரே நேரத்தில் 1000 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆண்கள், ஒரு பெண்கள் போட்டி நடத்தப்படும். இதில் 36,000க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும்
-
பி.எஸ்.எப்., வீரர்களுக்கு நவீன கேமரா வழங்கல்
-
உரிமைகளை குடிமக்கள் தெரிந்து கொள்வது முக்கியம்: தலைமை நீதிபதி
-
ஊட்டி அருகே முழு கொள்ளளவை எட்டிய அவலாஞ்சி அணை திறப்பு
-
சோழ பேரரசர்களான ராஜராஜனும், ராஜேந்திரனும்... பாரதத்தின் அடையாளம்! ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி புகழாரம் இருவருக்கும் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பேச்சு
-
ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டை துாக்கி சென்ற காட்டு யானை அச்சத்தில் மசினகுடி பகுதி மக்கள்
-
தென்னை சார் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி; பிரிட்டனுடனான ஒப்பந்தத்தால் அதிகரிக்கும்