ஈட்டி எறிதல்: தீபிகா சாதனை

சங்ரூர்: ஈட்டி எறிதலில் (20 வயது) இந்திய வீராங்கனை தீபிகா தேசிய சாதனை படைத்தார்.

பஞ்சாப்பில், இந்திய ஓபன் தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் தீபிகா பங்கேற்றார். ஐந்து மாதங்களுக்கு பின் போட்டிக்கு திரும்பிய இவர், 6 வாய்ப்பிலும் தலா 50 மீ.,க்கு மேல் எறிந்தார். இதில் 3 வாய்ப்பில், தலா 54 மீ.,க்கு மேல் எறிந்தார். முதல் வாய்ப்பில் அதிகபட்சமாக 56.41 மீ., எறிந்த தீபிகா முதலிடத்தை தட்டிச் சென்றார். தவிர, 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தனது தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு 54.98 மீ., எறிந்திருந்தார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் திபான்ஷு சர்மா 19, முதலிடம் பிடித்தார். இவர், அதிகபட்சமாக 76.03 மீ., எறிந்தார். மற்ற போட்டிகளில் சர்வேஷ் (நீளம் தாண்டுதல், 2.26 மீ.,), சீமா (வட்டு எறிதல், 55.03 மீ.,), கிர்பால் சிங் (வட்டு எறிதல், 54.65 மீ.,) முதலிடத்தை கைப்பற்றினர்.

Advertisement