இந்தியாவுக்கு 21 பதக்கம்: பிரிட்டிஷ் பாரா பாட்மின்டனில்

கார்டிப்: பிரிட்டிஷ், இரிஷ் பாரா பாட்மின்டனில் இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 21 பதக்கம் கிடைத்தது.
இங்கிலாந்தின் கார்டிப் நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிட்டிஷ், இரிஷ் பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் 'எஸ்.எச்.6' பிரிவு பைனலில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ 21-11, 21-23, 21-11 என பெருவின் கியுலியானா போவேடாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு.5' பிரிவு பைனலில் இந்தியாவின் துளசிமதி முருகேசன் 18-21, 21-17, 21-16 என்ற கணக்கில் சகவீராங்கனை மணிஷா ராமதாசை தோற்கடித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல்.3 - எஸ்.எல்.4' பிரிவு பைனலில் இந்தியாவின் ஜெகதீஷ், நவீன் ஜோடி, நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
மற்ற பிரிவு போட்டியில் இந்தியாவின் சுகந்த் கடம், சஞ்சனா குமாரி, உமேஷ் குமார், சூர்யா வெள்ளிப் பதக்கம் வென்றனர். இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கம் கிடைத்தது.
மேலும்
-
தாட்கோவில் ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.3.5 லட்சம் மானியம்: 2 ஆண்டில் 4,687 பேர் பெற்று சுயதொழில் செய்கின்றனர்
-
பி.எஸ்.எப்., வீரர்களுக்கு நவீன கேமரா வழங்கல்
-
உரிமைகளை குடிமக்கள் தெரிந்து கொள்வது முக்கியம்: தலைமை நீதிபதி
-
ஊட்டி அருகே முழு கொள்ளளவை எட்டிய அவலாஞ்சி அணை திறப்பு
-
சோழ பேரரசர்களான ராஜராஜனும், ராஜேந்திரனும்... பாரதத்தின் அடையாளம்! ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி புகழாரம் இருவருக்கும் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பேச்சு
-
ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டை துாக்கி சென்ற காட்டு யானை அச்சத்தில் மசினகுடி பகுதி மக்கள்