2.25 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுகிறது வரித்துறை

புதுடில்லி:கடந்தாண்டு பட்ஜெட்டில் மாற்றியமைக்கப்பட்ட, குறைந்த மதிப்பிலான வருமான வரி வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நேரடி வரிகள் வாரியத்தை வலியுறுத்திஉள்ளார்.
கடந்த பட்ஜெட்டில், தீர்ப்பாயங்கள், நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரி வழக்குகளுக்கான குறைந்தபட்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது.
இதையடுத்து, தற்போது வரை, 4,605 மேல் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், 3,120 வழக்குகள் புதிய வரம்புக்கு கீழ் இருந்ததால் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில், புதிய வரம்பை காட்டிலும் குறைவாக உள்ள அனைத்து வழக்குகளையும் அடையாளம் கண்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாக இவற்றை திரும்பப் பெறுமாறு வரித்துறையினரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணமாக 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2.25 லட்சம் வழக்குகள் திரும் பப் பெறப்பட உள்ளன.
@block_B@ மேல் முறையீடு வரம்பு பிரிவு மதிப்பு (ரூ.) மாற்றத்துக்கு முன் மாற்றத்துக்கு பின் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 50 லட்சம் 60 லட்சம் உயர் நீதிமன்றம் 1 கோடி 2 கோடி உச்ச நீதிமன்றம் 2 கோடி 5 கோடிblock_B
@block_B@ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகள் - 5.77 லட்சம்
புதிய வரம்பின் படி திரும்பப் பெற வேண்டிய வழக்குகள் - 2.25 லட்சம்block_B