ராஜா தேசிங்கு சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை


ஓசூர்: ஓசூரில் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்க மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் மற்றும் குடும்ப விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் இந்தர் சிங் தலைமை வகித்தார். மாநில தலைவர் பவானி சிங் முன்னிலை வகித்து, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிய-ருக்கு உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்-கினார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பேசினார்.


கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கட்டப்பட்-டுள்ள தேசிங்கு ராஜன் கோவிலின் உள்ளே தயார் நிலையி-லுள்ள ராஜா தேசிங்கு உருவ சிலையை நிறுவ, தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும். ராணிப்பேட்டையில் நடந்து வரும், ராஜா தேசிங், ராணி பாய் நினைவு சின்னங்களின் புனரமைப்புக்கு பின் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு குழுவில், தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்திற்கு உரிய பிரதிநிதித்-துவம் வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இலவச மருத்துவ முகாம் மற்றும் வரன் பார்க்கும் இலவச கல்யாண கேந்திரா நிகழ்ச்சி நடந்தது.

Advertisement