புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம்

தர்மபுரி: தர்மபுரியில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் புதிய கட்டடத்தில் செயல்படுவது குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்-டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், திங்கட்கிழமை தோறும், மக்கள் குறை-தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வரு-கிறது. இன்று முதல், பழைய கலெக்டர் அலுவலக கட்டடம் அருகே உள்ள, புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தில், அதியன் கூட்டரங்கில் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது. எனவே, மனுக்கள் வழங்க வரும் பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், புதிய
கட்டடத்தில் உள்ள கூட்டரங்கில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement