புள்ள முனியப்பன் கோவில் திருவிழா

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், தின்னஹள்ளி பஞ்., எட்டியானுார் கிராமத்தில் புள்ள முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 2 நாட்களுக்கு முன், கொடியேற்றத்-துடன் திருவிழா தொடங்கியது.

நேற்று, சுவாமி கரகம் அழைப்பு, பூ கூடை அழைப்பு ஆகியவை நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், முப்பூசை அலங்காரம், மஹா தீபா-ராதனை நடந்தது. பின்னர், சுவாமிக்கு ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

Advertisement