'சிசிடிவி' சேதம் குற்றங்கள் கண்டறிவதில் சிக்கல்

வையாவூர்:வையாவூர் ஊராட்சி, நல்லுாரில், சேதமடைந்த 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வையாவூர் ஊராட்சி, நல்லுார் வீரஆஞ்சநேயர் கோவில் அருகில், ஊராட்சி நிர்வாகம் அமைத்த, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா சேதமடைந்து, உடைந்து தொங்கிய நிலையில் உள்ளது.
இதனால், அப்பகுதியில் நடை பெறும் குற்ற சம்பவங்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால், இப்பகுதியில், 'சிசிடிவி' கேமரா அமைத்ததன் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.
எ னவே, நல்லுார், வீரஆஞ்சநேயர் கோவில் அருகில் சேதமடைந்துள்ள, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement