தற்காப்பு கலை பயிற்சி சான்றிதழ் வழங்கல்

புதுச்சேரி: பெரியகாலாப்பட்டு பாருக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 'மிஷன் வீரமங்கை' தலைப்பில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.

சீனியர் எஸ்.பி., அனிதா ராவ் ஏற்பாட்டில் நடந்த 'மிஷன் வீரமங்கை' தற்காப்பு கலை பயிற்சியில் 8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 180 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். 10 நாட்கள் நடந்த பயிற்சி முகாமிற்கான நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளியின் துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன், தலைமை ஆசிரியர் பூங்குன்றன் தலைமை தாங்கினர். தற்காப்பு கலை பயிற்சியில் சிறந்து விளங்கிய 10 மாணவிகளுக்கு வீரமங்கை விருதும், பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில்,

காலாப்பட்டு போலீசார், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பயிற்சி பெற்ற மாணவிகள், தாங்கள் பயின்ற தற்காப்பு கலையை போலீசார் முன்னிலையில் செயல் விளக்கம் அளித்தனர்.

Advertisement