சேவை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம்: குழந்தை நலன் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு;
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் ரூ.4 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும்.
இந்த விருதுகள் அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் தலா ஒரு லட்சம் என வழங்கப்படுகிறது.
உரிய ஆவணங்களுடன் கருத்துருவினை,15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.