குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தல்

கோட்டக்குப்பம்: மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து, இல்லம் தேடி வரும் துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க நகராட்சி ஆணையாளர் புகேந்திரி அறிவுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோட்டக்குப்பம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் இடத்தில் சேரும் குப்பையை தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும். பொது இடங்களிலோ, கழிவுநீர் கால்வாயிலோ, காலிமனைகளிலோ குப்பைகளை கொட்டக்கூடாது.

திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு பணிகளில், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக புகார்களை, 7708206337 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொது மக்கள் தங்கள் பகுதி குறைகளை புகார் அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement