அரசு ஆரம்ப பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் சாணிமேடு அரசு ஆரம்ப பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

குழு தலைவர் கோகிலாம்பாள் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அறிவழகன் வரவேற்று, கூட்டத்தின் நோக்கமும், செயலும் பற்றியும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மாணவர் முன்னேற அரசின் திட்டங்களை விளக்கியும் கூறினார்.

வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து வட்டார வளமைய ஆசிரியர் பிரீத்தா, ஆசிரியர்கள் ராஜ், ரமேஷ் மற்றும் மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழு கொண்டு வந்த சீர்வரிசை எழுது பொருள்கள், வாய்ப்பாடுகள், விளையாட்டுப் பொருள்கள், தேச தலைவர்களின் படங்கள், கணித உபகரணங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி வளர்ச்சிக்கான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

Advertisement