மோடி வருகை திருமாவளவன் மகிழ்ச்சி
சென்னை: “கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு வந்து, பிரதமர் மோடி வழிபட்டது மகிழ்ச்சி அளிக்கிறது,” என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவரது பேட்டி:
கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்து வழிபாடு செய்தது மட்டுமல்லாமல், ஆடி திருவாதிரை விழாவிலும் பங்கேற்று, ராஜேந்திர சோழன் சாதனை குறித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், 'ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு திருவுருவ சிலை அமைக்கப்படும்' என, பிரதமர் மோடி அறிவித்து இருப்பதை, தொகுதி எம்.பி., என்ற முறையிலும், மண்ணின் மைந்தன் என்ற முறையிலும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement